பழநி முருகன் கோயில் வளாகத்தில் புகைபிடித்தால் ரூ 100 அபராதம்
பழநி: பழநி மலைக் கோயில் வளாகத்தில், புகை பிடித்தால் ரூ 100 அபராதம் விதிக்கப்படும், என மலைக்கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று பழநி முருகன் கோயில். இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தினமும் ஏராளமான பக்தர்கள் மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.
ரோப்கார் அருகே உள்ள கழிப்பறை அருகில் பக்தர்கள் சிலர், அந்த பகுதியை புகை பிடிக்கும் இடமாக மாற்றி வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோயில் நிர்வாகம் கோயில் வளாகத்தில் புகை பிடிப்பது கோயில் புனிதத்தை கெடுப்பது போன்றதாகும், இந்த செயல் மற்ற பக்தர்களின் மனதை புண்படுத்துகின்றது.
எனவே, மலைக் கோயில் வளாகத்தில் உள் பகுதியில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ 100 அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்ள்ளது. மேலும், இந்த உத்தரவை அமுல்படுத்த ரோந்து குழு அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications