Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருந்து வாங்க பயமாயிருக்கு.. விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருந்து கடைகளில் போய் மக்கள் மருந்து வாங்க பயப்படும் நிலையை உருவாக்கிவிட்டது திமுக அரசு என விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று விடுத்துள்ள அறிக்கை:

நோய் வந்தால் சாதாரண மக்கள் மருந்துக்கடைகளை நாடுவது உண்டு. தலைவலி, காய்ச்சல் என்றாலே, டாக்டரிடம் போகாமல் தாங்களே மருந்துக்கடைகளில் மருந்துகள் வாங்கும் பழக்கம் இன்னும் ஏராளமான அளவில் இருக்கிறது.

மருந்துக்கடைகளில் போலி மருந்துகளும் தரமற்ற மருந்துகளும், காலாவதி மருந்துகளும், மாத்திரைகளும் வழங்கப்படுகிறது என்ற செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. காலாவதியான மருந்துகளை உட்கொண்டதால் குழந்தைகள் இறந்ததன் மூலம் மருந்துத் துறையில் நடைபெறும் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே தடுப்பு ஊசி போட்ட உடனேயே தமிழ் நாட்டில் குழந்தைகள் இறந்த சம்பவங்கள் உண்டு. யானைக்கால் நோய்க்கு மருந்து சாப்பிட்டு மயக்கம் அடைந்தவர்கள் உண்டு. இவற்றிற்கெல்லாம் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அரசு சமாளித்ததே தவிர இவற்றின் பின்னணியில் நடைபெறும் மோசடிகளைக் கண்டு கொள்ளவில்லை.

இத்தகைய மெத்தனப் போக்குக்காரணமாக இன்று நோய் வந்தால் கூட பரவயில்லை. ஆனால் அதற்காக அரசாங்க மருத்துவமனைகளையோ அல்லது மருந்து கடைகளையோ நாடுவது, போலி மருந்துகள் மூலம் மரணத்தை விலைக்கு வாங்குவதாகவே ஆகி விடுகிறது என்கிற பயம் ஏற்பட்டுள்ளது.

மளிகைக் கடைகளைப்போல மருந்துக் கடைகள் பெருகியுள்ளன. இவற்றில் எத்தகைய மருந்துகள் வழங்கப்படுகின்றன. எங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. மருந்தாளுநர்கள் இந்த கடைகளில் உள்ளனரா? என்ற அடிப்படை ஆய்வுகளைக்கூட மக்கள் நல்வாழ்வுத்துறை மேற்கொள்ளாமல் கும்பகர்ண தூக்கத்தில் உள்ளது.

தரமற்ற மருந்துகளையும், போலி மருந்துகளையும் தாராளமாக விநியோகிப்பது மட்டுமல்ல, பல மருந்துக்கடைகளில் இவர்களே நோயாளிகளுக்கு வைத்தியமும் செய்து வருகின்றனர். இதன் விளைவாகவும் உடல் உபாதைகளும், உயிரி ழப்புக்களும் ஏற்படுகின்றன. டாக்டருக்கு பணம் கொடுக்க முடியாத அளவுக்கு நாட்டில் வறுமை தாண்டவமாடுவதே இதற்கு காரணம்.

புற்றீசல் போல போலி மருந்துகளைத் தயாரிக்கும் கம்பெனிகள் இயங்கி வருகின்றன. காலாவதியான மருந்துகளை கைப்பற்றி அடையாள வில்லைகளை மாற்றி ஒன்றுக்கு பத்தாக விலை வைத்து பல போலி மருந்து நிறுவனங்கள் கடைகளுக்கு சப்ளை செய்து வருகின்றன. தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிற்சாலை ஆய்வாளர்கள் போன்றோருக்கு இவை தெரியாதா?

மருந்து உற்பத்தி, மருந்து கொள்முதல், மருந்து கடைகளுக்கு மருந்து சப்ளை செய்தல், காலாவதியான மருந்துகளை திரும்பப் பெறுதல், அவற்றை முறைப்படி அழித்தல் போன்ற நடவடிக்கைகளை தி.மு.க. அரசு கண்காணிப்பதில்லை.

மருந்து கடைகளில் உள்ள மருந்துகளை அவ்வப்போது முறையாக சோதிப்பதும் இல்லை. இந்த தவறுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தும் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று தருவதும் இல்லை. அரசுத்துறையில் போதிய மருந்தாய்வாளர்கள் நியமிக்கப்படவில்லை.

இதன் விளைவாக பல்லாயிரம் கோடி ரூபாயில் நடைபெறும் மருந்து தயாரிப்பு தொழிலில் கள்ளவாணிபம் தலை விரித்தாடுவதை தடுக்காமல் ஒப்புக்கு ஒன்று இரண்டு வழக்குகளைப்போடுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்..." என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+