கொலை வழக்கில் ஆயுள் கைதியாகும் 12 வயது சிறுவன்!
ஹாரிஸ்பர்க்: 8 மாத கர்ப்பிணியாக இருந்த தந்தையின் காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த 12 வயது சிறுவனுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட பின் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜோர்டன் பிரவுன். 12 வயதே ஆன இவர், தனது தந்தையின் 'கேர்ள்பிரண்ட்' கென்ஷிமேரி ஹவுக் (26) என்பவரை கடந்த ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டார்.
தனது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை விரும்பாததாலும், கென்ஷிமேரி கர்ப்பமாக இருப்பதை அறிந்த பின்னரும் ஆத்திரத்தில் சிறுவன் ஜோர்டான் பிரவுன் இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.
கொலை சம்பவம் நடந்த போது கென்ஷிமேரி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் வயிற்றில் வளர்ந்த ஆண் குழந்தையும் இறந்துபோனது.
இக்கொலை சம்பவம் தொடர்பாக சிறுவன் பிரவுனை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
ஜோர்டான் 12 வயதுடையவனாக இருப்பதால் முதலில் சிறுவர் சீர் திருத்த நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரிக்க முதலில் திட்டமிடப்பட்டது.
ஆனால் ஜோர்டான் செய்த குற்றத்தின் தன்மையைக் கருதி வழக்கமான நீதிமன்ற விசாரணையே நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, லாரன்ஸ் நகர செசன்சு நீதிமன்றத்தில் நீதிபதி டொமினிக் மோட்டோ முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது.
இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற ஏப்ரல் 5ம் தேதி வழங்கப்பட உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications