ராணுவ தலைமைத் தளபதியாக வி.கே.சிங் நாளை பதவியேற்பு: புலிகளை ஒடுக்க திட்டம் வகுத்தவர்

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நிறைந்த அனுபவம் கொண்டவர் வி.கே.சிங். தற்போது கிழக்குப் பிராந்திய தலைமைத் தளபதியாக இருந்து வருகிறார். நாளை ராணுவத் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.
59 வயதாகும் வி.கே.சிங், நாளை ஜெனரல் தீபக் கபூரிடமிருந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார். 2 ஆண்டுகளுக்கு தலைமைத் தளபதி பதவியில் இருப்பார் சிங்.
இந்திய ராணுவத்தின் ராஜ்புத் பிரிவைச் சேர்ந்த அதிகாரி சிங். வெல்லிங்டன் ராணுவக் கல்லூரியில் படித்தவர். அமெரிக்க ராணுவ போர் கல்லூரியிலும் பயின்றுள்ளார். அமெரிக்கானின் போர்ட் பென்னிங்கில் ரேஞ்சர்ஸ் கோர்ஸையும் முடித்துள்ளார்.
ராஜ்புத் படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தலைமைத் தளபதி பதவிக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.
1970ம் ஆண்டு ஜூன் மாதம் ராஜ்புத் படைப் பிரிவில் இணைந்தார் சிங். தீவிரவாத ஒழிப்புப் பணிகளில் நிறைந்த அனுபவம் கொண்டவர். இந்தியா, பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
முக்கியமாக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் திட்டமான ஆபரேஷன் பவன் என்ற திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். அதற்காக அவருக்கு யுத் சேனா பதக்கமும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1971ம் ஆண்டு நடந்த வங்கதேசப் போரின்போது இவர் பெரும் பங்காற்றியுள்ளார். கடந்த 2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது பாகிஸ்தான் மீது படையெடுப்பதற்காக ஆபரேஷன் பராக்கிரம் என்ற பெயரில் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன. அதை ஒருங்கிணைத்து நடத்தியவர் சிங்.
அதி விசிஷ்ட் சேவா பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications