காலாவதி மருந்து வழக்கு - முக்கியப் புள்ளியான சஞ்சய்குமாரைத் தேடி ராஜஸ்தானில் போலீஸ் வேட்டை
சென்னை: காலாவதியான மருந்து விற்பனை விவகாரத்தில் முக்கியப் புள்ளியான சஞ்சய் குமார் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீஸார் சஞ்சய்குமாரின் உறவினர் வீடுகளில் சோதனை நடத்தினர்.
மும்பையில் உள்ள சஞ்சய்குமாரின் உறவினர் வீடுகளிலும் வேட்டை நடத்தப்பட்டது.
சென்னையில் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த பெரும் சம்பவத்தில் முக்கியப் புள்ளியாக கருதப்படுகிறார் சஞ்சய்குமார். மார்வாடியான அவர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடிப் பிடிக்கும் பணியில் தனிப்படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எழும்பூரில் உள்ள சஞ்சய்குமாரின் மருந்து குடோனை சோதனை செய்த போலீசார் அங்கிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான காலாவதியான மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
கொடுங்கையூர் குப்பை சேகரிக்கும் வளாகத்தில் கொட்டுவதற்கு எடுத்து வந்த டிரைவர் வெங்கடேசன் அதை அங்கு கொட்டாமல் ரவி என்பவரிடம் கொடுத்து பணம் வாங்கிக் கொண்டார். அந்த காலாவதியான மருந்துகள் அனைத்தும் டிரைவர் ஜான்பாஷா மூலமாக சஞ்சய்குமாருக்கு தான் அனுப்பப்பட்டது.
சஞ்சய்குமார்தான் அதை மீனாட்சி சுந்தரம் மற்றும் வேறு சிலருக்கு விற்பனைக்கு அனுப்பியுள்ளார். எனவே மிகவும் முக்கிய நபரான இவர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடித்தால் தான் மேலும் விவரங்கள் தெரியவரும். தற்போது தனிப்படை போலீசார் சஞ்சய் குமாரை தேடி மும்பை மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பாலி ஆகிய ஊர்களுக்கு சென்று உள்ளனர்.
மும்பையில் தானே பகுதியில் சஞ்சய் குமாரின் உறவினர் வீடு உள்ளது. அவரது வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். ஆனால் அவர் அங்கு இல்லை. அங்கிருந்து தப்பிவிட்டார். ராஜஸ்தான் மாநிலம் பாலியில் அவரது உறவினர் வீடு உள்ளது.
ராஜஸ்தான் அவரது சொந்த மாநிலமாகும். அதனால் அங்கு அவர் பதுங்கி இருக்கக்கூடும் என்று தனிப்படை போலீசார் பாலியில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கும் இல்லை. இதுவரை சஞ்சய்குமார் சிக்கவில்லை.
சஞ்சய்குமார், பாஸ்கர் ஆகிய இருவரும் பிடிபட்டால் வழக்கில் திருப்பம் ஏற்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications