திருசெங்கோடு அருகே கோவில் சிலை தகர்ப்பு - மோதல் வெடிக்கும் அபாயம்!
திருச்செங்கோடு: கோவில் சிலை தகர்ப்பு தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதையடுத்து, அசம்பாவிதத்தை தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ளது கூட்டபள்ளி அய்யாக்கவுண்டம்பாளையம். இந்த பிரிவு சாலையில் மரத்தடியில் விநாயகர், முருகன் கோவில் உள்ளது.
இந்த கோவில் அமைந்துள்ள இடம் தொடர்பாக இருவேறு சமுதாயத்தினருக்கு இடையே கடந்த சில மாதங்களாக பிரச்னை நிலவி வந்தது.
இது தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், கோவிலில் உள்ள சாமி சிலைகளின் தலையை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த திருச்செங்கோடு டிஎஸ்பி ராஜசேகர் தலைமையில் போலீஸார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
கோவில் பிரச்னை குறித்து ஆர்.டி.ஓ. சடையாண்டி, தாசில்தார் சேகர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications