பல்லடத்தில் மர்ம நோய் தாக்கி 7000 கோழிகள் பலி - பீதி

Subscribe to Oneindia Tamil

பல்லடம்: கோவை மாவட்டம் பல்லடம் அருகே ஒரு கோழிப்பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல்லடம் அருகே உள்ளது வெங்கிட்டாபுரம். அங்குள்ள ஒரு கோழிப்பண்ணையில் திடீரென மர்ம நோய் தாக்கி 7000 கோழிகள் உயிரிழந்தன. என்ன வகையான நோய் கோழிகளைத் தாக்கியது என்று தெரியவில்லை.

ஒரே நேரத்தில் ஒரு கோழிப்பண்ணையில் 7000 கோழிகள் செத்து விழுந்ததால் மற்ற கோழிப் பண்ணையாளர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் வந்து விட்டதோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து என்ன மாதிரியான நோய் தாக்கி கோழிகள் இறந்தன் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

கோழிகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்த பண்ணையில் தற்போது கால்நடைத்துறை மருத்துவமனைகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+