மக்கள் நடமாட வசதியாக ஹைதராபாத்தில் 2 மணி நேரம் ஊரடங்கு தளர்வு
ஹைதராபாத்: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பழைய ஹைதராபாத்தில் சார்மினார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரத்திற்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வசதியாக இந்த ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டது.
கடந்த திங்கள்கிழமை மாலை ஊரடங்கு உத்தரவு அங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்றுதான் முதல் முறையாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
ஹைதராபாத் கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 150 பேர் காயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே ஹைதராபாத்தில் மூண்ட கலவரம் திட்டமிட்ட சதியாகும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சாதாரண மோதலை பெரும் வன்முறையாக மாற்றியது, இரு சமூகங்களைச் சேர்ந்த சிலர் அனுப்பிய எஸ்.எம்.எஸ். செய்திகள்தான் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
ஹைதராபாத்தின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கலவரம் காரணமாக ஹைதராபாத் முழுவதும் 410 மையங்களில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications