நெல்லை ஏட்டுகள் 3 பேருக்கு கட்டாய ஓய்வு - ஒருவர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் இன்று 3 ஏட்டுகளுக்கு கட்டாய ஓய்வும், ஒருவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டனர்.

கல்லிடைக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த ஏட்டு உமையொருபெருமாள். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அம்பை கோர்ட் வாளகத்தில் சிலருடன் சூதாடினார். இதனால் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதேபோல பழவூர் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த ஏட்டு சுந்தரைய்யா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழவூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்த பெண்ணிடம் செல்போனிலும், நேரிடையாகவும் செக்ஸ் டார்ச்சர் அளித்தார். இதனால் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுபோன்று வாசுதேவநல்லூர் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த ஏட்டு மணிமாறன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புகாரின் அடிப்படையில் பாளை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இவர் பணிக்கு பஸ்சில் வந்தபோது போலீஸ் சீருடையை அவிழ்த்து வி்ட்டு குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் இவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், நெல்லை எஸ்பி உத்தரவின் பேரில் சஸ்பெண்ட்டில் இருந்த போலீஸ் ஏட்டுகள் உமையொருபெருமாள், சுந்தரய்யா, மணிமாறன் ஆகியோருக்கு நேற்று கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் நேற்று சீவலபேரி போலீஸ் ஸ்டேஷனில் பணியில் குடிபோதையில் இருந்த ஏட்டு ஏசுதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+