செங்கோட்டை யூனியன் குடோனில் 500 சிமென்ட் மூடைகள் மாயம்
செங்கோட்டை: செங்கோட்டை யூனியன் வளர்ச்சி பணிக்களுக்காக குடோனில் வைத்திருந்த 500 சிமென்ட் மூட்டை மாயமானதை அடுத்து அரசு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு பஞ்சாயத்து யூனியன் உள்பட பல்வேறு அரசு துறைகளின் வளர்ச்சி பணிக்களுக்காக சிமிண்ட், ஸ்டீல், தார் உள்பட பல்வேறு பொருட்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்குவது வழக்கம். இந்நிலையில் செங்கோட்டை பஞ்சாயத்து யூனியன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்பட பல்வேறு பணிகளுக்கு வழங்கப்பட்ட சிமென்ட் செங்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட கட்டளைகுடியிருப்பு குடோனில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இங்கு வைக்கப்பட்டிருந்த சிமென்ட் மூடைகளில் 500 மூடைகள் திடீரென மாயமானது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதுகுறித்து குடோன் காவலாளி முத்தைய்யாவை அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே முத்தையா மனைவி சுப்பம்மாள் புளியரை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சிமென்ட் மூடைகள் மாயமானது குறித்து தனது கணவரை அதிகாரிகள் மிரட்டுவதாகவும், அதனால் தனது கணவரை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் தெரிவித்துள்ளார்.
அரசு பணிகளுக்காக குடோனில் வைத்திருந்த சிமென்ட் மூட்டை மாயமானது அப்பகுதியி்ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications