சுப்ரீம் கோர்ட் உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும்: பிரதமருக்கு அச்சுதானந்தன் கடிதம்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தூக்கித் தூரப் போட்டு விட்டு தனிச் சட்டத்தை இயற்றிய கேரளா, இன்று அதே உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஒன்றை வேகமாக அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முல்லை பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து ஆராய முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையைலி குழு அமைக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த குழு அவசியமற்றது என்றும், குழுவில் தமிழகம் சார்பில் யாரும் இடம் பெற வேண்டியதும் தேவையற்ற என்ற நிலைபாட்டை தமிழக அரசு எடுத்துள்ளது.
ஆனால், கேரளா சார்பில் இக்குழுவில் இடம்பெறும் உறுப்பினராக நீதிபதி கே.டி.தாமஸை கேரள அரசு ஏற்கனவே நியமித்துவிட்டது.
மத்திய அரசு தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு மாதமாகியும் மத்திய அரசு சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் எனக் குறிப்பிட்டு கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தூக்கித் தூரப் போட்டது இதே கேரள அரசுதான். அந்த உத்தரவை செல்லாத்தாக்கும் வகையில் சட்டத்தைக் கொண்டு வந்த்து. அதை எதிர்த்துதான் தற்போதைய வழக்கே தொடரப்பட்டள்ளது தமிழக அரசால்.
அன்று உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், அவமதித்த கேரள அரசு, இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகி விடும் என்று பரபரப்பது பெரும் கேலிக்கூத்தாக உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications