தமிழக போலீசாருக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வோம்: ஜி.கே.மணி
சேலம்: தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்ய உள்ளதாக பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் கோ.க.மணி சேலத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,
'தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் அடிமட்ட சாதாரண போலீசார் வரை நல்ல திறமையாக செயல்பட்டு, நாட்டுக்கு பெருமை சேர்க்கிறார்கள். இவர்களை பாராட்டுவதோடு, வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
அதே நேரத்தில் சமீபகாலமாக போலீஸ் துறையின் கைகள் கட்டப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் மேச்சேரி பிரச்னையில் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
பீதியின் காரணமாக ஊரை விட்டு வெளியேறி தலைமறைவாக இருக்கும் நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பாமக அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்கள் மீது இதுவரை எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
மாறாக காவல்துறை குற்றவாளிகளுக்கு துணை நிற்கிறது. ஒரு தலைப்பட்சமாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அடிபட்ட பாமகவினருக்கு சிகிச்சை அளிக்காமல் தொடர்ந்து சிறையில் அடைத்து இருப்பது மனித உரிமை மீறல் செயலாகும்.
தமிழக போலீஸ் துறை அதிகாரிகள் கட்டவிழித்து விடப்பட்டு, அடியாட்களாகவும், கூலிப்படையாகவும் செயல்படுகின்றனர். இது மனித உரிமை மீறும் செயலாகும். இது குறித்து மனித உரிமை ஆணையத்திடம் பாமக புகார் செய்யும்
போலீசாரின் அராஜக செயல்களை கண்டித்து இன்று (ஏப்ரல் 2 ம் தேதி) மேச்சேரியில், பாமக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications