நித்யானந்தா - ரஞ்சிதா வீடியோ: மாஜி சீடர் லெனின் கர்நாடக போலீசிடம் வாக்குமூலம்!
சென்னை: நித்யானந்தாவின் அந்தரங்கத்தை வெளியுலகுக்கு கொண்டு வரும் எண்ணத்தில் தான் அவரின் படுக்கை அறை காட்சிகளை வீடியோ எடுத்தேன் என்று நித்யானந்தாவின் மாஜி சீடர் லெனின் போலீசாரிடம் கூறியுள்ளார்.
நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு வீடியோவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் நித்தியானந்தா. சேலத்தைச் சேர்ந்தவரும், நித்யானந்தாவின் மாஜி சீடருமான லெனின் போலீசாரிடம் கடந்த மாதம் 6ம் தேதி ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.
இதன்பேரில் நித்யானந்தா மீது 295 (ஏ) (மத உணர்வை துன்படுத்துதல்), 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுதல்), 506 (1) (மிரட்டல்), 120 (பி) சதித்திட்டம் தீட்டுதல்) ஆகிய 6 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மாநில அதிகார எல்லை காரணமாக நித்யானந்தா மீதான வழக்குகள் கர்நாடக போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. கொலை மிரட்டல் உள்பட 2 வழக்குகள் மட்டும் சென்னை போலீசில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நித்யானந்தா இன்னமும் தலைமறைவாகவே உள்ள நிலையில், புகார் அளித்த லெனினிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது கர்நாடக போலீசார் பல்வேறு கேள்விகளை லெனினிடம் கேட்டுள்ளனர். அனைத்துக்கு அசராமல் பதில் தந்துள்ளார் லெனின்.
போலீஸ் விசாரணையில் லெனின் கூறியிருப்பதாவது: பெங்களூரில் நித்யானந்தா சாமியாரின் ஆஸரமத்தில் வேலை செய்த போது அவரின் அந்தரங்கங்களை தெரிந்து கொண்டேன்.
அவரின் அந்தரங்க முகத்தை அரங்கத்துக்கு கொண்டுவர நினைத்தேன். அந்த வீடியோ கேமராவை நான் சாமியாரின் படுக்கை அறையில் வைக்கவில்லை.
அங்குள்ள சிலர் எனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் தான் கேமராவை வைக்க உதவினர். அவர்களை நான் காட்டிக் கொடுக்க மாட்டேன். வீடியோவில் சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டுள்ளன.
நித்யானந்தாவை ஆயிரக்கணக்கானவர்கள் கடவுளாக பாவித்து வழிபடுகிறார்கள். அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக வீடியோவை வெளியிட்டு நித்யானந்தாவின் உண்மையான சொரூபத்தை காட்டினேன்.
நான் ரஞ்சிதாவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி வீடியோ எடுக்கும் போது அவர் சிக்கிக் கொண்டார். இதற்காக வருந்துகிறேன்.
எனது எண்ணம் சாமியாரைப் பற்றி வெளி உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது தான். ஆஸ்ரமத்தில் ஆரம்ப காலத்தில் சில பெண்கள் என்னிடம் நித்யானந்தா பற்றிய புகார்களை தெரிவித்தனர்.
பின்னர் விசாரித்து ஆதாரப்பூர்வமாக அதை வெளியிட நினைத்து தான் வீடியோ எடுத்தேன்.
மூன்று மாதத்துக்கு முன்புதான் அந்த வீடியோ எடுக்கப்பட்டது. சமீபத்தில் என்னுடன் நித்யானந்தா டெலிபோனில் பேசி மிரட்டிய ஆடியோ கேசட்டையும் போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறேன்.
நித்யானந்தா என்னை சமரசத்துக்கு வருமாறு அழைத்தார். நான் மறுத்ததால் என்னை மிரட்டினார் என்று லெனின் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications