ஒரிசாவில் மாவோயிஸ்ட் வன்முறை: பாதுகாப்பு படையினர் 11 பேர் பலி

உள்நாட்டு பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்கியே தீருவது என்ற முனைப்புடன் மத்திய உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
மேற்குவங்கத்தில் நக்சல் பாதித்த லால்கர் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நிர்வாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய சிதம்பரம், ஒரிசா மற்றும் ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்ட் அட்டகாசம் அதிகளவில் இருப்பதாகக் குறிப்பிட்டுவிட்டு, 'மாவோயிஸ்டுகள் கோழைகள்' எனக் கூறினார்.
இவ்வாறு சிதம்பரம் பேட்டியளித்த சிறிது நேரத்தில் ஒரிசாவில் சாலையில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடி வெடித்து வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாதுகாப்புப் படையினர் 11 கொல்லப்பட்டனர்.
ஒரிசாவில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் உள்ளன. கொராபுட் மற்றும் மால்கங்கிரி மாவட்டத்தில் பைபரிகுடா நகரத்தை ஒட்டிய பகுதியில் நக்சல் ஆதிக்கம் வெகுவாக உள்ளதாக கருதப்படுகிறது.
மால்கங்கிரி மாவட்டத்தில் கோவிந்தப்பள்ளி என்ற இடத்தில் இந்த கண்ணிவெடி வெடித்துள்ளது. அவ்வழியே வாகனம் சென்றபோது இதில் சிக்கி வெடித்து சிதறியது.
அருகில் உள்ள பகுதியில் மாவோயிஸ்டுகள் மரங்களை வெட்டிப்போட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, இந்த வீரர்கள் அப்பகுதிக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் கண்ணிவெடியில் சிக்கிவிட்டதாக தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications