ஓ.பி, செங்கோட்டையன், தம்பித்துரையுடன் சிறுதாவூர் பங்களாவில் ஜெ. ஆலோசனை

சென்னை அருகே திருப்போரூரில் இருந்து 4 கிமீ தொலைவில் மாமல்லபுரம் சாலையில் சிறுதாவூர் உள்ளது. இங்குள்ள சொகுசு பங்களாவில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுப்பது வழக்கம்.
கடந்த 1968ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோது, காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி, பங்களா வளாகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டு வந்தது.
ஆனால் இந்த பங்களா தனக்கு சொந்தமானது இல்லை என ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டில் இவ்விவகாரம் வலுவடைந்த நிலையில் தமிழக அரசு சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம் தலைமையிலான ஒரு நபர் குழு விசாரணை ஆணையம், உச்சநீதிமன்ற ஒப்புதலுடன் விசாரணை செய்து கடந்த மார்ச் மாதம் தமிழக அரசிடம் அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது.
விசாரணை அறிக்கையின் அம்சங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுதாவூர் பங்களாவுக்கு செல்வதை தவிர்த்து வந்த ஜெயலலிதா இன்று திடீரென சிறுதாவூர் பங்களாவுக்கு விஜயம் செய்தார்.
இன்னொரு தனிக் காரில் ஓ.பன்னீர் செல்வம், தம்பித்துரை, கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரும் சிறுதாவூர் பங்களாவுக்கு விரைந்தனர். அங்கு இடைத் தேர்தல் தோல்வி, சட்டசபை பட்ஜெட் விவாதம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார் ஜெயல்லிதா.
பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுக வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. டெபாசிட்டையும் இழந்தது. இது அதிமுகவினரை சிதறடித்துள்ளது. இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாத ஈரோடு மாவட்டத் தொண்டர் தங்கவேலு தீக்குளித்து விட்டார்.
இது ஜெயல்லிதாவை உலுக்கி விட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக ஈரோடு சென்று தங்கவேலுவைப் பார்த்து ஆறுதல் கூறினார். இந்தப் பின்னணியில்தான், சிறுதாவூர் பங்களாவுக்கு ஜெயலலிதா சென்று அங்கு வைத்து ஆலோசனை நடத்தியுள்ளார் ஜெயல்லிதா.
ராசிக்காக முன்பெல்லாம் முக்கியப் பிரச்சினை என்றால் சிறுதாவூர் பங்களாவில் வைத்த்தான் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார் ஜெயல்லிதா. ஆனால் கொடநாடு பங்களாவுக்கு மாறிய பின்னர் தொடர்ந்து அவர் சரிவையே சந்தித்த வருவதால் ராசிக்காக சிறுதாவூர் பங்களாவை இந்த முறை ஆலோசனை நடத்த அவர் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications