பென்னாகரம் தோல்வி- தீக்குளித்த ஈரோடு அதிமுக தொண்டர் தங்கவேலு மரணம்
ஈரோடு: பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்த்தோடு, படுதோல்வியையும் தழுவியதால் அதிர்ச்சி அடைந்து தீக்குளித்த ஈரோடு அதிமுக தொண்டர் தங்கவேலு இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்து 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஈரோட்டைச் சேர்ந்த அதிமுக தொண்டர் தங்கவேலு தீக்குளித்து விட்டார்.
படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஈரோடுக்கு விரைந்து சென்று தங்கவேலுவைப் பார்த்து ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்துக்கு ரூ 1 லட்சம் நிவாரண உதவியையும் அளித்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று தங்கவேலு உயிரிழந்தார்.
ஏற்கனவே குமார் என்ற தொண்டர் அதிமுக தோல்வியைத் தாங்க முடியாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது தங்கவேலுவும் உயிரிழந்துள்ளது அதிமுக வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
--












Click it and Unblock the Notifications