சானியா திருமணத்துக்கு எதிர்ப்பு: இ.ம.க.வினர் 27 பேர் கைது
சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக்கை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமணம் செய்வதை எதிர்த்து பேராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சியினர் 27 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கும், அதிரடி திருப்பங்களுக்கும் இடையே இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்குக்கும் வருகிற 15ம் தேதி திருமணம் நடக்க உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த சோயுப் மாலிக்கை சானியா மிர்சா திருமணம் செய்யக்கூடாது என்று இந்து மக்கள் கட்சியினர் நேற்று சென்னை கடற்கரை சாலையில் கண்ணகி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இ.ம.கட்சியின் தமிழக செயலாளர் பி.ஆர்.குமார் இதற்கு தலைமை தாங்கினார். உடனடியாக அண்ணாசதுக்கம் போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில், 'சானியா மிர்சாவுக்கு இந்தியா பல விருதுகளையும், பரிசுகளையும் கொடுத்துள்ளது.
அந்த விருதுகள், பரிசுகள் அனைத்தையும் அவர் இந்தியாவிடம் திருப்பி கொடுத்துவிட வேண்டும். இனிமேல் சானியா மிர்சாவையும், அவரது குடும்பத்தையும் இந்தியாவிற்காக விளையாட அனுமதிக்கக்கூடாது.
அவரையும் அவரது குடும்பத்தையும் நாடு கடத்தவேண்டும்' என்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications