கலைஞர் வீட்டுவசதி திட்டத்தில் புறக்கணிப்பு - ஊராட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

இராமநாதபுரம்: கலைஞர் வீட்டு வசதித் திட்ட பயனாளிகள் தேர்வுக் குழுவில் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி ராமநாதபுரத்தில் ஊராட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் குடிசை வீடுகள் குறித்து வருவாயத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள்.

இந்த திட்டத்திற்கான ஊராட்சி அளவிலான பயனாளிகள் தேர்வுக் குழுவில் ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர், கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், ஊராட்சித் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் ஊராட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வட்டார வளர்ச்சி அதிகாரி முனியாண்டி தலைமையில் நடைபெற்றது.

அப்போது இராமநாதபுரம் ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சக்கரக்கோட்டை அசோக்குமார், செயலாளர் மாடக்கொட்டான் சாதிக் அலி, துணை நிர்வாகிகள் பேராவூர் முருகேசன், தேவி பட்டினம் சேகு அபுல் உசேன் உள்ளிட்டோர் கூட்டத்தை புறக்கணித்தனர்.

பயனாளிகள் தேர்வுக் குழுவில் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து யூனியன் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+