3 அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்- அதிமுக, இடதுசாரி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று திமுகவுக்கும், அதிமுகவுக்கும் டேய கடும் வாதம் மூண்டது. இதையடுத்து 3 அதிமுக உறுப்பினர்கள், அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்த்து. அப்போது துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி பேசுகையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து கருத்து ஒன்றைத் தெரிவித்தார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோர், வி.பி.துரைசாமி பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க்க் கோரி ஆவேசமாக கூச்சலிட்டனர்.
இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் வெளியேறுமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் வெளியேற மறுத்தனர். இதையடுத்து 3 பேரையும் அவையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே வந்து 3 அதிமுக எம்.எல்.ஏக்களையும் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
இதைக் கண்டித்த அதிமுக உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர். அவர்களுக்கு ஆதரவாக மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் தெரிவிக்கையில், அதிமுக உறுப்பினர்கள் தங்களது கருத்தைக் தெரிவிக்க வாய்ப்பு வழங்காமல் சபாநாயகர் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டார். இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்த்தாக தெரிவித்தார்.
இடதுசாரிகள் வெளிநடப்பு
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் இன்று வெளிநடப்பு செய்தனர்.
தங்களுக்குப் பேச கூடுதல் நேரம் தர சபாநாயகர் மறுத்ததால் வெளிநடப்பு செய்வதாக அவர்கள் பின்னர் தெரிவித்தனர்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications