குழந்தை பிறந்த 3வது நாளில் கல்யாணம் செய்த ஜோடி
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்த முன்றாம் நாளில் காதல் ஜோடிக்குத் திருமணம் நடந்தது. கர்ப்பமாக்கிய காதலியை கைவிட்ட காதலன் குழந்தை பிறந்த உடன் கரம் பிடித்தார்.
புதியம்புத்தூர் அருகே நடுவைக்குறிச்சி கீழதெருவை சேர்ந்த திருப்பதி மகள் சரிதா. இவர் அங்குள்ள ரெடிமேட் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராஜாமணி மகன் ராஜன். இவர் அதே கடையில் டெய்லராக வேலை பார்த்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.
இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்த நிலையில் அடிக்கடி உல்லாசமாக இருந்தனர். அதில் சரிதா கர்ப்பமானார்.
இந்நிலையில் ராஜனுக்கு அவரது வீட்டில் வெறொரு பெண்ணை பிப்ரவரி 7ம் தேதி திருமணம் செய்து வைத்தனர்.
இதையடுத்து அந்தப் பெண்ணுடன் அவர் வேலூரில் குடியேறினார். ராஜன் புதியம்புத்தூரில் இருந்து வேலூர் சென்ற தகவல் சரிதாவுக்கு தெரியவில்லை.
ராஜனின் திருமணத்தையும் மறைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே 3ம் தேதி சரிதாவுக்கு பிரவச வலி ஏற்பட்டது. அப்போதுதான் தனது பெற்றோரிடம் தன்னுடன் வேலை பார்த்த ராஜனை காதலித்தாகவும், அவரால்தான் கர்ப்பம் ஏற்பட்டது என்றும் கூறினார்.
உடனே அவரை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அன்று மாலை சரிதாவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் ராஜனின் பெற்றோரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த தகவல் ராஜனுக்கு தெரிந்ததும் உடனே அவர் அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது கர்ப்பத்திற்கு காரணம் நான் அல்ல என்றார்.
பின்னர் போலீசார் டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்த தயாரானபோது சரிதாவும் நானும் பலமுறை உல்லாசமாக இருந்த்தாக ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவரை போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சரிதாவுக்கும், ராஜனுக்கும் திருமணம் நடந்தது. இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். குழந்தை பிறந்த பின்னர் பெற்றோருக்கு திருமணம் நடந்தது தூத்துக்குடி, புதியம்புத்தூ்ர் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications