மும்பை தாக்குதலில் தாவூத்தின் பங்கு - அமெரிக்க ராணுவ கல்லூரி அறிக்கை
வாஷிங்டன்: கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத்த் தாக்குதலுக்கு தாவூத் இம்பராஹிமின் ஆதரவும் இருந்ததாக அமெரிக்க ராணுவக் கல்லூரி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2008 செம்படம்பர் 26ம் தேதி, கடல் வழியாக மும்பைக்குள் தீவிரவாதிகள் புகுந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்று பெரும் கபளீகரம் ஏற்படுத்தினர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பே காரணம். தாக்குதல் நடத்தி சிக்கிய தீவிரவாதி கசாப் மீதான விசாரணை சமீபத்தில்தான் முடிவடைந்தது.
தாக்குதல் சதி திட்டம் பாகிஸ்தானில் இருந்து தான் தீட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு, இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமும் உடந்தையாக இருந்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் கசிந்தன.
இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ போர் கல்லூரியின் பாதுகாப்பு மற்றும் போர் வியூக பயிற்சிப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைப் பற்றிய அந்த அறிக்கையில் தாவூத் பற்றி பல்வேறு தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின்னர் கடந்த 1993ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் பகுதியில் தாவூத் தங்கியிருப்பதாக தெரிகிறது.
பாகிஸ்தானில் ஏராளமான ஷாப்பிங் மால்கள், சொகுசு பங்களாக்கள், கப்பல் மற்றும் இதர போக்குவரத்து நெட்வொர்க் தொழில்களில் தாவூத் ஈடுபட்டுள்ளாதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் ஹெராயின் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் சப்ளை செய்வதில் தாவூத்திற்கு முக்கிய பங்குள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
அதோடு, 2008ம் ஆண்டில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தாவூத்தின் பங்கு மிக முக்கியமானது.
இந்த தாக்குதல் திட்டத்தை தீவிரவாதிகள் தாங்கள் திட்டமிட்டபடி நிறைவேற்றியதற்கு, தாவூத் அளித்த 'லாஜிஸ்டிக் சப்போர்ட்' தான் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது.
தாவூத் அளித்த ஆதரவின் மூலமாகவே தீவிரவாதிகளும், ஆயுதங்களும் நாசூக்காக மும்பைக்குள் நுழைய முடிந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications