தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் சமுதாய கூடம் கட்டப்படும்: மு.க.ஸ்டாலின்
சென்னை: நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள படி ஒவ்வொரு ஊராட்சியிலும் சமுதாய நலக் கூடங்கள் கட்டப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, பெரம்பலூர் மாவட்டத்தில் சமுதாயக் கூடம் அமைப்பது தொடர்பாக வரகூர் அதிமுக எம்எல்ஏ சந்திரகாசி கேள்வி எழுப்பினார்.
இதுபற்றி அரசு பரிசீலிக்கவில்லை என்று அமைச்சர் தமிழரசி பதிலளித்தார். அப்போது சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், 'ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு சமுதாயக் கூடம் அமைக்க அரசு முன்வர வேண்டும். திருமணம் நடத்த கஷ்டப்படும் ஏழைகளுக்கு இந்தக் கூடம் உதவிகரமாக இருக்கும். இதற்கு ரூ.350 கோடி தான் செலவாகும்' என்று கூறினார்.
அப்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, 'இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சுதர்சனத்தின் கேள்விக்கான பதில் அடங்கியுள்ளது.
ஒவ்வொரு ஊராட்சியிலும் சமுதாய நலக்கூடங்கள் கட்டப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையான இடத்தில் அவை கட்டித்தரப்படும்' என்று பதிலளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications