1, 6ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் சமச்சீர் கல்வி திட்ட புத்தகங்கள் வழங்கப்படும் - அமைச்சர்
சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் ஜுன் முதல் வாரத்தில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
தமிழக சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரத்தின் போது இத்தகவலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், 'தமிழகத்தில் இதுவரை 200 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. மேலும் 200 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
மாணவர்களிடம் நற்பண்புகளை ஏற்படுத்துவதற்காக, வரும் காலங்களில் நீதிபோதனை வகுப்புகளையும் கல்வி அட்டவணையில் இடம் பெறச் செய்வதற்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ஒன்று மற்றும் 6ம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அனைத்தும் தரமான ஆசிரியர்கள் மூலம் எழுதப்பட்டு, அச்சடிக்கப்பட்டு உள்ளன. ஏ4 அளவில் 8ஜிஎஸ்எம் தாளில் வெளிநாட்டு தரத்துடன் இந்த புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
வரும் ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகளுக்கு இந்தப் புத்தகங்கள் கொடுக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications