சட்டசபையில் பின்பக்கத்தைக் காட்டி உறுப்பினர்கள் நிற்கக் கூடாது - சபாநாயகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் சபாநாயகரை நோக்கி பின் பக்கத்தை காட்டி நின்ற படி அதிமுக உறுப்பினர் பேசிக்கொண்டிருந்தது சர்ச்சையை எற்படுத்தியது.

சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ சின்னசாமி நேற்று தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது தனது இருக்கையை விட்டு எழுந்து வந்து, அதிமுக கொறடா செங்கோட்டையனிடம் பேசிக் கொண்டிருந்தார்.

சபாநாயகர் ஆவுடையப்பன் இதைப்பார்த்ததும், உடனடியாக இருக்கைக்குத் திரும்பும்படி சின்னசாமியை கண்டித்து உத்தரவிட்டார்.

இதனால் கோபமடைந்த சின்னசாமி ஆவேசமாக பதில் கூறினார். இதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களும், ஆளும் கட்சி எம்எல்ஏக்களும் ஒருவருக்கு ஒருவர் எதிராக கோஷமிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஆவுடையப்பன், 'இந்த புதிய அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் பேசி முடிவு செய்திருக்கிறோம்.

ஆனால் அதை மீறி, சபாநாயகர் இருக்கையை நோக்கி பின்பக்கத்தை காட்டியபடி சின்னசாமி நின்று கொண்டிருக்கிறார். இப்படி நிற்கக் கூடாது என்று சின்னசாமியிடம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்த வேண்டும்' என்றார்.

அப்போது குறுக்கிட்ட பன்னீர்செல்வம், 'சின்னசாமி இங்கு வந்து, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதுபோல் சத்தம் போட்டு பேசவில்லை.

அவை நிகழ்ச்சியில் தொடர்ந்து இருக்க முடியவில்லை என்றும் அவசர விஷயமாக வெளியே செல்ல இருப்பதையும் சொல்வதற்காகத்தான் இங்கு அவர் வந்தார். இதற்கு நீங்கள் புதிய வடிவம் கொடுத்து கண்டிக்கிறீர்கள்' என்றார்.

'நேற்றும் ஒருவர் இப்படித்தான் பின்புறத்தை அவைக்கு காட்டியபடி நின்றார். இன்று காலையில் கூட செங்கோட்டையனிடம் பேசி, இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று தெரிவித்தேன். மீண்டும் இப்படி செய்யலாமா' என்று ஆவுடையப்பன் கேட்டார்.

அப்போது அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு, 'அவையில் நடந்து கொள்வது பற்றி அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

சபாநாயகரை நோக்கித் யாரும் பின்பக்கத்தை காட்டிக் கொண்டு நிற்கக் கூடாது என்பது அவை மரபு. நேற்று ஒருவர் இங்கிருந்து செல்போனில் பேசினார். இவை எல்லாம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.

பேசிக் கொண்டு இருக்கும் எம்எல்ஏ விரும்பினால் தண்ணீர் குடிக்கலாம். மற்றபடி முதல்வரை தவிர வேறு யாரும் அவைக்குள் தண்ணீர், காபி, டீ குடிக்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

எம்எல்ஏ ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அவருக்கும் சபாநாயகருக்கும் குறுக்கே மற்றவர்கள் செல்லக் கூடாது' என்றார்.

இதைக்கேட்ட ஓ.பன்னீர்செல்வம், 'ஒழுக்கம், பண்பு போன்றவை எல்லா உறுப்பினர்களுக்கும் வேண்டும். அவைக்கு முதுகுப் பக்கம் தெரியக் கூடாது என்றால், எல்லா இருக்கைகளையும் உங்களை நோக்கி இருக்கும்படியே போடலாமே' என்றார்.

யாரிடம் சென்று யார் பேசினாலும், சபாநாயகருக்கு முதுகு தெரியாத கோணத்தில் நின்று பேசலாம் என்று இறுதியில் துரை முருகன் கூறினார். பின்னர் இந்த விவாதத்தை இதோடு நிறுத்திக் கொள்ளலாம் என முற்றுப்புள்ளி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+