அதிமுக எம்.எல்.ஏக்கள் மீதான சஸ்பெண்ட் தண்டனை ஒரு நாளாக குறைப்பு

நேற்று தமிழக சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. திமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அருண்மொழித் தேவன், ஹரி ஆகியோர் கடும் மோதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இருவரையும் வெளியேற்ற சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் மீண்டும் உள்ளே வந்த அவர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் பின்னர் அவர்களை 9ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று காலை சட்டசபை கூடியதும், அதிமுக எம்.எல்.ஏக்கள் மீதான சஸ்பெண்ட் தண்டனையை ஒரு நாளாகக் குறைக்கலாம் என்று முதல்வர் கருணாநிதி பரிந்துரைத்தார்.
இதை ஏற்ற சபாநாயகர் ஆவுடையப்பன், சஸ்பெண்ட் உத்தரவு இன்று வரை அமலில் இருக்கும் என்றும், நாளை முதல் சஸ்பெண்ட் ஆன அதிமுக எம்.எல்.ஏக்கள் சபைக்கு வரலாம் என்றும் அறிவித்தார். இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவைத் தவிர அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயல்லிதா நேற்று சபைக்கு வராததால் அவர் சஸ்பெண்ட் ஆகவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications