சென்னை, வேலூர் எம்பி தொகுதிகளில் 21 பேர் தேர்தலில் போட்டியிட தடை
சென்னை: சென்னை மற்றும் வேலூர் எம்பி தொகுதிகளில் போட்டியிட்ட 21 வேட்பாளர்கள், தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாததால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, அரக்கோணம் மற்றும் வேலூர் தொகுதிகளில் போட்டியிட்ட சில வேட்பாளர்கள், சொத்து கணக்கினை தாக்கல் செய்யவில்லை.
சிலர் தாக்கல் செய்த சொத்து கணக்குகள் சரியானதாக இல்லை. இதன் அடிப்படையில், வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட புளியந்தோப்பு முகமது அப்துல்லா, கொசப்பேட்டை கதிரவன், கண்ணதாசன் நகர் நிர்மல் குமார், பெரம்பூர் வி.பாஸ்கரன்,
தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட சைதாப்பேட்டை பாலன், சைதாப்பேட்டை பாலசுப்பிரமணியன், சைதை குமார், ராஜா முத்தையாபுரம் ராஜா மற்றும் திருவான்மியூர் மாத்துக்கரசு
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட திருவல்லிக்கேணி ரங்கநாதன், அரும்பாக்கம் தாமோதரன், அரும்பாக்கம் லோகநாதன், விருகம்பாக்கம் வில்சன் பால், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட பட்டாபிராமபுரம் சீனிவாசன், ஷெனாய் நகர் பழனி, உரியூர்குப்பம் மேத்யூ,
வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ராமன், சுரேஷ்குமார், நாராயணன் மற்றும் மன்சூர் அகமது உள்பட 21 பேர் 3 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications