போலி மருந்து வழக்கில் மேலும் 5 பேர் கைது
சென்னை: போலி மருந்து வழக்கில் மேலும் 5 மருந்து கடைக்காரர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் வெடித்துக் கிளம்பியுள்ள காலாவதி மற்றும் போலி மருந்து வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கிறார்கள். காலாவதி மருந்து வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.
போலி மருந்து வழக்கில் சென்னையை சேர்ந்த சீனிவாசன், ஹேமந்த்குமார், கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோர் கைதானார்கள்.
இவர்களை தற்போது 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில், போலி மருந்து வழக்கில் நேற்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மருந்து கடை நடத்தும் இவர்கள் சுனில்குமார் கோத்தாரி (38), கிரீஷ் (26), பதம்சந்த் (42), வெங்கடேசன் (34), வேலூரைச் சேர்ந்த அப்ரோஸ்கான் (23).
இவர்கள் 5 பேரும் நேற்று சென்னை எழும்பூர் 2வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ஸ்ரீதேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். பின்னர் ஐந்து பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications