மதுவுக்காக தந்தையை கொலை செய்த மகன் கைது
சேலம்: சேலம் அருகே மதுவுக்காக தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகில் உள்ள வீரப்பனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.
இந்த நிலையில், இவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் திடீர் என்று காணாமல் போய்விட்டார். இது குறித்து அவரது மனைவிகள் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சுப்பிரமணி கொலை செய்யப்பட்டார் என்று போலீஸாருக்குத் தகவல் கிடைத்த்து. இதன் அடிப்படையில்,இவரது முதல் மனைவியின் மகன் கோவிந்தராஜ் என்பவரை மேச்சேரி போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், 'நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது மது பாட்டில் வாங்கி வந்து வீட்டில் வைத்து இருந்தேன்.
வீட்டில் வைத்த அந்த மது பாட்டில் காணவில்லை என்பதால் எனது தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர் என்னை மிகவும் கொச்சையான வார்த்தைகளால் திட்டியதோடு, கல்லாலும் தாக்க வந்தார்.
அப்போது அவரை தடுத்து அடித்த போது அவர் கீழே சரிந்து விழுந்தார். இதில் இவர் இறந்து விட்டார். இதை எனது தாயார் செல்லம்மாள் பார்த்து விட்டார்.
இது மற்றவர்களுக்கு தெரிந்தால் பிரச்னை வரும் என கருதி அன்று இரவே எனது வீட்டு அருகில் உள்ள குப்பையில் போட்டு மூடிவிட்டோம்.
நான் போதையில் இருந்த போது, பழனி என்பவரிடம் இதுபற்றி உளறிவிட்டேன். அவர் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் செய்ததன் பேரில் போலீசார் என்னை கைது செய்தனர்' என்று கூறியுள்ளார்.
தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications