மின்கட்டணம் விரைவில் உயருகிறது – பாதிக்காத வகையில் இருக்கும் என கருணாநிதி தகவல்
சென்னை: தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இருப்பினும் இந்த மின் கட்டணம் மக்களைப் பாதிக்காத அளவில் இருக்கும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து தமிழக மின்வாரியம் பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகிறது. இந்த கருத்து கேட்பு கூட்டங்களில் பங்கேற்போர் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் நடந்த கருத்தக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று மின்வாரியத் தலைவர் சி.பி.சிங் பேசுகையில்,
தமிழ்நாட்டில் மின் தேவைக்கும், வினியோகத்துக்கும் உள்ள இடைவெளி 30 சதவீதமாக உள்ளது. எனவே மாநிலத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மின்சார உற்பத்திக்காக கடந்த 2 ஆண்டுகளில் மின் வாரியம் ரூ. 4 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் ரூ. 8 ஆயிரம் கோடியில் இருந்து ரூ. 10 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யும் திட்டம் உள்ளது.
தமிழ்நாட்டில் தனி நபரின் மின் நுகர்வு ஆண்டுக்கு 1100 யூனிட்டாக உள்ளது. எனவே தனி நபர் நுகர்விலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.
வீடுகளில் மாதத்துக்கு 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கட்டண உயர்வு இருக்காது. இதே போல் சிறுதொழில் நிறுவனங்களில் ஒரு மாதத்துக்கு 750 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் கட்டண உயர்வு இருக்காது.
மின் கட்டண உயர்வு என்பது வீடுகளில் 100 யூனிட்டை தாண்டும்போது அதிகபட்சமாக ஒரு யூனிட்டுக்கு ரூ. 1 என்ற அளவில் உயர்வு இருக்கும்.
தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க தமிழக அரசு தயாராக இருந்தாலும் போதிய மின்சாரம் கிடைப்பது இல்லை. எனவே இப்போதுள்ள மின்வெட்டு மேலும் சில காலங்களுக்கு நீடிப்பதை தடுக்க முடியாது.
கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது செயல்பட தொடங்கினால் ஓரளவு மின் பற்றாக்குறை நீங்கும் என்றார்.
பாதிப்பு இருக்காது – கருணாநிதி
சட்டசபையில் மின் கட்டண உயர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, தாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே மின்கட்டணத்தி்ல் சிறிது மாற்றம் இருக்கும். சாதாரண மக்களின் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படாது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications