மான்கறி டாக்டர் விஜயக்குமாரின் 2 உறவினர்கள் கைது
சென்னை: மான்கறி வைத்தியம் பார்ப்பதாகக் கூறி நோயாளிகளிடம் பண மோசடி செய்த டாக்டர் விஜயகுமாரின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் திருவிதாங்கூர் ராஜவைத்தியசாலை என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்தவர் விஜயகுமார்.
இவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் மான்கறி வைத்தியம் செய்வதாக சொல்லி லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வந்தார்.
புகாரின் பேரில் விஜயகுமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். குண்டர் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விஜயகுமாரின் மகன் ஜெகதீஷ்குமார், மருமகள் அனிதா ஆகியோர் மீதும் புகார் வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களை போலீசார் தேடி வரும் நிலையில், இருவருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக ஜெகதீஷ்குமாரின் மாமியார் சுஜாதா, மைத்துனர் புதிர்குமார் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications