சானியா கல்யாணத்தில் தொடரும் குழப்பம்- ஏப்.15ம் தேதிதான் நடைபெறும் என அறிவிப்பு
ஹைதராபாத்: சானியா மிர்ஸா, சோயப் மாலிக் திருமணத்தில் தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வருகிநறன. நேற்று இரவு திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஏப்ரல் 15ம் தேதிக்கே திருமணத்தை மாற்றியுள்ளனர்.
சானியா – சோயப் மாலிக் திருமணம் அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு குழப்பங்கள் தொடங்கி விட்டன. ஆயிஷா பிரச்சினை அதில் பெரிதாக இருந்த்து. அந்தப் பிரச்சினை முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி ஏப்ரல் 15ம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
திருமணத்திற்காக சோயப் மாலிக்கின் குடும்பத்தினரும் ஹைதராபாத் வந்து சேர்ந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்குத் திருமணம் நடைபெறும் என திடீரென அறிவிக்கப்பட்டது. சானியா வீட்டில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. காஜி அஸ்மதுல்லா ஜாப்ரி திருமணத்தை உறுதி செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த்து.
ஆனால் திட்டமிட்டபடி நேற்று திருமணம் நடைபெறவில்லை. சோயப் மாலிக் தனது பாஸ்போர்ட், ஹைதராபாத் போலீஸார் தன் மீது தொடர்ந்த வழக்குகளை முடித்து விட்டது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை நேற்று தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து திருமணத்தை நடத்த முடியாது என்று காஜி தரப்பில் கூறப்பட்டு விட்டதாம்.
ஆயிஷா கொடுத்த புகாரின் பேரில் சோயப்பை சானியா வீட்டில் வைத்து விசாரித்த போலீஸார் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இன்னும் அது திருப்பித் தரப்படவில்லை என்று தெரிகிறது. இதனால்தான் நேற்று திருமணத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு விட்டதாம்.
தற்போது பழையபடி ஏப்ரல் 15ம் தேதியன்றே திருமணம் நடைபெறும் சானியா தரப்பில் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications