ஷார்ஜா- மரணதண்டனை பெற்ற 17 இந்தியர்களின் அப்பீல் மே 19ல் விசாரணை
துபாய்: துபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்கள் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு வரும் மே 19ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
ஷார்ஜாவில் மது கடத்தல் தொடர்பாக எழுந்த பிரச்னையில் ஒரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்ட வழக்கில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்கள் 17 பேரில் 16 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஹரியானாவைச் சேர்ந்தவர்.
மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்த 17 இந்தியர்கள் மேல் முறையீடு செய்து தண்டனையில் இருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்திய வெளியுறவு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார்கள்.
அமீரக நிர்வாகமும், குற்றம் சாட்டப்பட்ட 17 இந்தியர்களும் மேல்மூறையீடு செய்யலாம் அறிவித்தது.
இந்நிலையில், ஷார்ஜா நீதிமன்றத்தில் 17 பேர் சார்பிலும் மேல் முறையீட்டு மனு கடந்த புதன் கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையி்ல இம்மனு மீதான விசாரணை வரும் அடுத்த மாதம் மே 19ம் தேதி விசாரணைக்கு வரும் என இந்தியர்கள் தரப்பில் ஆஜராகும் வக்கீல்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் ஆஜராக துபாயில் உள்ள முகமது சல்மான் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனத்தை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
சட்ட ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த வக்கீல் பிந்து சுரேஷ் செத்தூர் இத்தகவலை தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications