மக்கள் அரசு பஸ்களை அதிகளவு பயன்படுத்த வேண்டும்: ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: பிரச்னைகள் ஏற்படும் போது பொது சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்று பொது மக்களை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.
சிவகங்கை அருகே அழகிச்சிபட்டியில் காரைக்குடி - மதுரை இடையே புதிய பேருந்து வழித்தட துவக்க விழா மாவட்ட கலெக்டர் மகேசன் காசிராஜன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசுகையில்,
'அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அவசர தேவைக்கு வேண்டு என்றால் தனியார் வாகனங்களை பயன்படுத்தலாம். இதில், தான் சிக்கனம் கிடைக்கும்.
பொதுவாக மக்கள் கோபம் வெளிப்படும் போது, அரசின் பொது சொத்துக்களான பஸ், ரயில்கள் மீது கற்களை வீசி சேதப்படுத்துகின்றனர்.
இது மக்களின் வரிப்பணத்தில் இருந்து வந்தது என புரிந்து கொண்டு செயல்படுங்கள்' என்றார்.












Click it and Unblock the Notifications