வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்த பழ.நெடுமாறன் வேண்டுகோள்
நெய்வேலி: தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவதால் வெளி மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின் வினியோகத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார்.
நெய்வேலியில் நேற்று நிருபர்களை சந்தித்தபோது பழ.நெடுமாறன் கூறியதாவது:
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் விளைவாக அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தனது பதவியில் இருந்து விலகினார்.
அதே போல தற்போது போலீசார் மீது மாவோஸ்டுக்கள் தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது பதவியில் இருந்து விலக வேண்டும்.
ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சர் சிதம்பரத்தின் ராஜினாமாவை நிராகரித்துள்ளார்.
சிதம்பரம் பதவி ஏற்ற பிறகு 10க்கும் மேற்பட்ட இடங்களில் மாவேயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 150 போலீசார் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதற்கு மத்திய உள்துறை மந்திரி பொறுப்பு ஏற்றுக் கொண்டு பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தொழில்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
மின்சாரம் இன்றி விவசாயிகள் பெரும் வேதனை அைடந்துள்ளனர். இதனால் கோடை காலத்தில் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கருகி பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெய்வேலி நிலக்கரி உற்பத்தி நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்தும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 80 சதவீதம் பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்திற்கு மட்டுமே பயன்படுத்த பட வேண்டும்.
அண்மையில் கர்நாடக அரசு உற்பத்தி செய்யும் மின் உற்பத்தியை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதை தடை விதித்துள்ளது.
இதனை தமிழக அரசு பின்பற்றி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதை தடை செய்ய வேண்டும்' என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications