பாஸ்போர்ட் திருப்பித் தரப்படாமலேயே சோயப் கல்யாணம் நடந்த்தா?
இஸ்லாமாபாத்: பறிமுதல் செய்யப்பட்ட சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட் இன்னும் திருப்பித் தரப்படாத நிலையில், அவருக்கும், சானியாவுக்கும் திருமணம் நடந்து முடிந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பெரும் இழுபறிக்குப் பின்னர் சானியா, சோயப் திருமணம் இன்று நடந்து முடிந்த்து. இடையில் ஆயிஷா சித்திக்கியால் ஏற்பட்ட சிக்கலால் சோயப் கைதாக்க கூடிய நிலைமை உருவானது.
ஆயிஷா கொடுத்த புகாரின் பேரில் சோயப்பை போலீஸார் விசாரித்தனர். பின்னர் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். இதுவரை பாஸ்போர்ட் திருப்பித் தரப்படவில்லை.
இநத நிலையில், சோயப்பிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை திரும்பத் தர வேண்டும் என பாகிஸ்தானிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதர் ஷாகித் மாலிக்கை தொடர்பு கொண்டார். சோயிப் மாலிக் பாஸ் போர்ட்டை உடனே திரும்ப பெறுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ஷாகித் மாலிக், டெல்லியில் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். சோயிப் மாலிக் பாஸ் போர்ட்டை உடனடியாக திரும்ப தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
பாஸ்போர்ட் இல்லாமல் திருமணத்தை நடத்த முடியாது என்று ஹைதராபாத் காஜி அஸ்மதுல்லா ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று சோயப்பின் திருமணம் அதி வேகமாக நடந்து முடிந்துள்ளது.
எனவே அவரிடம் பாஸ்போர்ட் திருப்பித் தரப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் கோர்ட்டில் ஆஜராகித்தான் பாஸ்போர்ட்டை பெற வேண்டும் என்பதால் அவர் இதுவரை கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால், பாஸ்போர்ட்டை அவர் எப்படிப் பெற்றார் என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது.
ஒருவேளை பாஸ்போர்ட் பெறப்படாத நிலையிலேயே திருமணம் நடந்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications