வாசன் கோஷ்டியைச் சேர்ந்த யுவராஜா தமிழக இளைஞர் காங். தலைவராக தேர்வு
திருச்சி: தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த சில மாதங்களாக தேர்தல் நடந்து வந்த்து. நேற்று கிளைமாக்ஸ், அதாவது தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.
பல்வேறு கட்டங்களாக நடந்த தேர்தலின்போது தேர்வு செய்யப்பட்ட 4225 பேர் இந்த தேர்தலில் வாக்களித்தனர். மாலையில் வாக்குப்பதிவு நடந்தது. பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு நள்ளிரவு வாக்கில் முடிவு அறிவிக்கப்பட்டது.
இதில் ஈரோடு மாவட்டம் செங்கோடம்பாளையத்தைச் சேர்ந்த யுவராஜா என்கிற ராஜா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு 1327 வாக்குகள் கிடைத்தன.
அவருக்கு அடுத்த இடத்தை ராமநாதபுரத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் பெற்றார். அவருக்க 1023 வாக்குகள் கிடைத்தன. இவர் கார்த்தி சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இவர் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
3வது இடத்தைப் பிடித்த மகேந்திரனுக்கு 276 வாக்குகள் கிடைத்தன. இவர் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இவர் தவிர பிரபு, காயத்ரி, அப்பாஸ், இளஞ்செழியன், சத்யா, அர்த்தநாரி ஆகியோரும் பொதுச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்தத் தேர்தலுக்கு முன்னதாக எம்.பி தொகுதி தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் 60 சதவீத இடங்களை வாசன் கோஷ்டியினரே கைப்பற்றியுள்ளனர்.
மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு தெளிவான முடிவு கிடைத்த்து. கோவையில் மட்டும் போட்டியிட்ட கல்யாண்குமாரும், சச்சிதானந்த குமாரும் தலா 51 வாக்குகளைப் பெற்றனர். இதையடுத்து டாஸ் போட்டு கல்யாண் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நேற்றைய தேர்தலின் மூலம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. இத்தேர்தலில் வாசன் கோஷ்டியினரை தலைவர் பதவி உள்பட முக்கியப் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வெற்றியை வாசன் ஆதரவாளர்களும் வென்றவர்களின் ஆதரவாளர்களும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications