மேலவை கலைப்பும் நடிகையும்-பாமக
சென்னை: தமிழகத்தில் மேலவைக்கு ஒரு நடிகையும் நியமிக்கப்பட்டார், 'திவாலான' அந்த நடிகையை எப்படி உறுப்பினராக நியமிக்க முடியும் என்று வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் அந்த நடிகை தனது பதவியை விட்டு வெளியேறினார். அதுவும் மேலவை கலைப்புக்கு காரணமாகக் கூறப்படுகிறது என்று பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி கூறினார்.
மீண்டும் மேலவையை அமைப்பது தொடர்பாக நேற்று தமிழக சட்டசபையில் நடந்த விவாதத்தின் முழு விவரம்:
ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்): இந்த தீர்மானத்தை மனமாற பாராட்டுகிறேன். சிறப்பாக செயல்பட்ட மேலவை எந்தச் சூழ்நிலையில் கலைக்கப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இலங்கை பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மேலவைக்கு சென்றபோது கலைக்கப்பட்டது.
சதன் திருமலைகுமார் (மதிமுக): 1986ம் ஆண்டு விவாதம் நடத்தி, தேவையில்லை என்பதால் தான் மேலவை கலைக்கப்பட்டது.
பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): இன்று மட்டுமல்ல, பல அரசியல் சூழ்நிலைகளில் மேலவையை நாங்கள் எதிர்த்திருக்கிறோம். பல நெருக்கடிகள், பிரச்சனைகள் இருக்கும் இந்நேரத்தில், திசை திருப்பும் நடவடிக்கையாக இந்த தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்திருக்கிறார். எனவே மேலவை சிந்தனை எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது என்பதை விளக்க வேண்டும். ஏற்கனவே அரசு கடன் வாங்கியுள்ள இந்த சூழ்நிலையில் மேலவை அமைக்கப்பட்டால் கூடுதல் செலவுதான் ஆகும். மாநிலங்களின் பிரச்சனைகளை கூறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற மேலவையான ராஜ்யசபா கூட மன்னர் பரம்பரையினருக்காக உருவாக்கப்பட்டதுதான் என்ற கருத்து உண்டு.
ஜி.கே.மணி (பாமக): அதிமுக ஆட்சிக் காலத்தில் மேலவையைக் கலைப்பதற்கு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, கனத்த இதயத்தோடு நாவலர் நெடுஞ்செழியன் முன்மொழிந்ததாக பலர் கூறக் கேட்டிருக்கிறேன். மேலும் மேலவைக்கு ஒரு நடிகையும் நியமிக்கப்பட்டார், 'திவாலான' அந்த நடிகையை எப்படி உறுப்பினராக நியமிக்க முடியும் என்று வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் அந்த நடிகை தனது பதவியை விட்டு வெளியேறினார். மேலவையில் கலைஞர் இருக்கக் கூடாது என்ற எண்ணத்திலும் அது கலைக்கப்பட்டதாக பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஆக, இவையெல்லாம் மேலவையைக் கலைப்பதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
மேலவையை மீண்டும் அமைக்க முன்மொழியப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை பாமக முழுமனதோடு வரவேற்கிறது.
செங்கோட்டையன் (அதிமுக): மேலவை கலைக்கப்படுவதற்கு நடிகை காரணம் என்று ஜி.கே.மணி பேசினார். நெடுஞ்செழியன் மனபாரத்தோடு இருந்தார் என்றும் அவர் கூறினார். கற்பனை கதையாக அவர் இப்படி கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஜி.கே.மணி: பத்திரிக்கை மூலமாகவும், நாவலருக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவும் கிடைத்த தகவலைக் கூறினேன். இன்னும் பல தகவல்கள் உள்ளன. அவை கலைக்கப்பட்ட போது மேலவையில் வீற்றிருந்த ம.பொ.சி. கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து சபை நீடிக்கும்படி கேட்டார்.
(இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிடவே பதிலுக்கு பாமகவினரும் பதில் தந்தனர். இதனால் இரு கட்சிகளின் எம்எல்ஏக்களும் வாக்குவாதத்தில் இறங்கினர். சபாநாயகர் தலையிட்டு அமைதிப்படுத்தினார்)
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): இந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் முழுமனதோடு வழிமொழிகிறது. ராஜ்யசபாவில் மன்னர் வாரிசுகள் மற்றும் முதலாளிகள் இருப்பதாக பாலபாரதி கூறினார். அங்கிருக்கும் பிருந்தா கரத், சீதாராம் யெச்சூரி, டி.கே.ரங்கராஜன் ஆகியோரெல்லாம் எப்போது மன்னர் வாரிசாக மாறினர்?
பாலபாரதி: அம்பானி போன்ற பணக்காரர்கள் இருக்கும் இடத்தில் தொழிலாளர்களின் பிரதிநிதியாக பிருந்தா கரத்தும் இருக்கிறார். அதாவது ராஜ்யசபாவுக்கு 2 தன்மைகள் இருக்கின்றன. முதலாளிகளும் இருக்கிறார்கள், தொழிலாளிகளும் அங்கு இருக்கிறார்கள்.
அமைச்சர் பொன்முடி: பல்வேறு தரப்பு மக்களின் பிரதிநிதித்துவம் அங்கு இருக்கிறது. அது அவசியம்தான்.
பீட்டர் அல்போன்ஸ்: முதலீட்டாளர்களின் பிரதிநிதியாக அம்பானி இருக்கிறார். அவரது குரலும் ஒலிக்கிறது. தொழிலாளிகளின் பிரதிநிதிகளின் குரலும் ஒலிக்கிறது. ஜனநாயகத்தில் எல்லோரின் குரலும் கேட்கப்பட வேண்டும்.
(அப்போது பீட்டர் அல்போன்சுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் ஏதோ கூறினர்)
பீட்டர் அல்போன்ஸ்: எனக்கும் பேசத் தெரியும். நீங்கள் எதுவும் சொல்லித் தர வேண்டாம். இதனால்தான் நீங்கள் டெபாசிட் இழந்து கிடக்கிறீர்கள்.
செங்கோட்டையன்: காங்கிரஸ் எத்தனை முறை டெபாசிட் இழந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. மற்ற கட்சிகளின் முதுகில் தொங்கித்தானே பவனி வருகிறீர்கள்?. உங்களால் தனித்து இயங்க முடியுமா?.
சுதர்சனம் (காங்கிரஸ்): டெபாசிட் இழந்த கட்சி என்று செங்கோட்டையன் கூறுகிறார். பின்னர் ஏன் காங்கிரசுடன் உறவு வைத்துக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?.
பீட்டர் அல்போன்ஸ்: அரவாணி, மாற்றுத் திறனுடையோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கும் மேலவையில் பிரதிநிதித்துவம் தர வேண்டும்.
பாலபாரதி: இவர்களுக்கு காங்கிரசில் முன்னுரிமை அளித்து, எம்.பி, எம்.எல்.ஏயாக்கியிருக்கலாமே?
செங்கோட்டையன்: இந்தத் தீர்மானத்தை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. மேலவைக்கு அறிஞர்கள், கல்வியாளர்கள் வந்து ஆலோசனை சொல்லலாம் என்றார்கள். அப்படியானால் காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் மேலவையைக் கொண்டு வந்திருக்கலாமே?. மேலவையை அமைப்பதால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். ரூ.8,000 கோடியில் அம்பானி வீடு கட்டி இருக்கிறார். அவர் ராஜ்யசபாவில் இருப்பது நல்லது என்கிறார்கள். அவரால் பொருளாதார சீர்திருத்தம் ஏற்பட்டு விடுமா?.
ஆட்சி அமைந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு மேலவையை கொண்டு வருகிறீர்கள். கட்சியில் உள்ள குழப்பத்தை தீர்க்கவும், தோழமை கட்சிகளுக்கு இடம் தரவும், தேர்தல் வரும் நேரத்தில் அரசியல் பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கும்தான் மேலவையை கொண்டு வருகிறீர்கள்.
ஜி.கே.மணி: சட்டசபையில் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில்தான் பேச முடிகிறது. மேலவையில் அரசியலுக்கு அப்பாற்பட்டும் பேச முடியும்.
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): அம்பேத்கர் கூட, மேலவை என்பது தற்காலிகமானதுதான், அதை எப்போதும் வேண்டுமானாலும் நீக்கலாம் என்று கூறியிருக்கிறார். எனவே அது தேவையற்றது என்றார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications