கரூரில் தினசரி 10 மணி நேரம் மின்வெட்டு - புழுங்கித் தவிக்கும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் தினசரி 24 மணி நேரத்தில் சுமார் 10 முறை மின் வெட்டு செய்யும் கரூர் மாவட்ட மின் வாரிய அலுவலகத்திற்கு பூட்டு போடப்போவதாக பொது நல அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கரூரில் கொசுவலை, ஜவுளி உற்பத்தி, டெக்ஸ்டைஸ்ல், சாயப்பட்டறை, விசைத்தறி, போன்ற பல்வேறு தொழில் நகரமாக உள்ளது.

மேற்கண்ட தொழில்கள் செய்ய மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.

ஆனால், கரூர் மாவட்டத்தில் ஒரு நாளில் சுமார் 10 முறை தேவையின்றி மின் வெட்டு நடைபெறுவதாக பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் தொழில்கள் முடங்கிப் போய் உள்ளதாகவும், வேலை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை காலை 9 மணி வரை மதியம் 12 மணி வரை மின் சப்ளை நி்றுத்தப்பகிறது.

நள்ளிரவு 1.30 மணி முதல் 5 மணி வரை மின்சார தடை செய்யப்படுகின்றது. மேலும் அவ்வப்போது சில முறை என சராசரியாக 10 மணிநேரம் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

மின் வினியோகம் அதிகளவில் நிறுத்தப்படுவதால் கொதிப்படைந்துள்ள கரூர் மாவட்ட வணிகர்கள் அமைப்பு, பொது நல அமைபுபகள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவி்த்துள்ளனர்.

இதே நிலை நீடித்தால் மின் வாரிய அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தப்படும் என அந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+