மாஸ்டர் கார்டு நிறுவனத் தலைவராக இந்தியாவின் அஜய் பங்கா!

புனே நகரைச் சேர்ந்த அஜய் பங்கா, டெல்லியில் படித்தவர். அகமதாபாத் ஐஐஎம்மில் உயர் படிப்பு முடித்தவர்.
பொதுவாக இம்மாதிரி சர்வதேச நிறுவனப் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் வெளிநாட்டில் ஒரு பட்டமாவது பெற்றிருப்பார்கள். ஆனால் பங்கா முழுக்க முழுக்க இந்தியாவிலேயே படித்துப் பட்டம் பெற்றவர்.
நெஸ்லே நிறுவனத்தில் தனது கேரியரைத் துவக்கிய அஜய் பங்கா, பின்னர் சிட்டி குரூப்பில் சேர்ந்தார். 2005 வரை சிட்டி குரூப்பில் தான் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.
மாஸ்டர்கார்டில் தலைவர் மற்றும் சிஓஓ பொறுப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் சேர்ந்தார் அஜய் பங்கா.
வருகிற ஜூலை 1ம் தேதி, மாஸ்டர்கார்டின் தற்போதைய சிஇஓ ராபர்ட் செலாண்டர் பதவி விலகுகிறார். அன்றே அஜய் பங்கா பொறுப்பேற்கிறார்.
சிஇஓவாக பொறுப்பேற்ற பிறகும் மாஸ்டர்கார்டு தலைவர் பதவியில் இவர் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் கார்டின் தலைவர் - சிஇஓவாக அஜய் பங்கா பொறுப்பேற்றுள்ளது, இந்திய சிஇஓக்கள் மீது சர்வேதச நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக கார்ப்பரேட் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அஜய் பங்கா சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவில் கால் வைத்த நாளன்றே, அஜய் பங்காவின் பெயரை சிஇஓவாக மாஸ்டர் கார்டு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அஜய் பங்காவின் முன் இப்போதுள்ள ஒரே சவால், தங்களுக்கு சற்று முன்னே பயணிக்கும் விசா கார்டு நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளவேண்டும் என்பதே!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications