ராஜிவ் கொலை-கே.பியை விசாரிக்க இலங்கையிடம் அனுமதி கோரும் இந்தியா

விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்வதில் முக்கிய பங்காற்றி வந்தவர் கே.பி. இவரை மலேசியாவில் வைத்து இலங்கை அரசு கடந்த ஆண்டு கைது செய்தது.
கொழும்பில் அவர் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை அரசுக்கு ஏராளமான தகவல்களை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கே.பியை விசாரிக்க அனுமதிக்குமாறு இந்தியா கோரி வருகிறது. ஆனால், சிபிஐ விடுத்த இந்தக் கோரிக்கை இலங்கை அரசால் இதுவரை ஏற்கப்படவில்லை.
இந் நிலையில் பத்மநாதனிடம் விசாரிக்க அனுமதிக்க கோரி மீண்டும் இலங்கைக்கு சி.பி.ஐ கடிதம் எழுதியுள்ளது.
மேலும் பத்மநாதனின் வங்கி கணக்குகளைத் தருமாறும் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை இந்தியாவிடம் தருவதில் இலங்கை இழுத்தடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன், இது தான் பிரபாகரன் மரணச் சான்றிதழ் என்று ஒரு வெற்றுத் தாளில் இலங்கை அதிகாரிகள் எழுதிக் கொடுத்தனர்.
இதையடுத்து பிரபாகரனின் மரண சான்றிதழின் மூலப் பிரதியை இந்தியா கேட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசு, இந்தியாவி்ன் இந்தக் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications