நெல்லை பைபாஸ் சாலையில் இன்சுலின் ஊசி குவியல்!
நெல்லை: நெல்லையில் சாலையின் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இன்சுலின் ஊசிகள் குவியலாக கொட்டப்பட்டிருந்தன.
தமிழகத்தில் காலாவதி மருந்து விவகாரம் வெடித்துக் கிளம்பயதை அடுத்து பல்வேறு பகுதிகளிலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகளின் அதிரடி ரெய்டுக்கு பயந்து ஆங்காங்கே மருந்து கடைக்காரர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகங்கள் தங்களிடம் உள்ள காலாவதி மருந்துகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
பல இடங்களில் மருந்துகள் குவியல் குவியலாக குப்பைகளில் கொட்டப்பட்டும், தீ வைத்து எரிக்கபட்டும் வருகின்றன. மருந்து மட்டுமல்லாது, மருந்துக்கடைகளில் கிடைக்கும் இதர பொருட்களின் காலாவதி தேதியையும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
குளுக்கோஸ், ஊசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் காலாவதி தேதியைத் தாண்டியிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கட்டாயம் உண்டு என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டின் மேல்பகுதியில் பாலம் வரை ரோட்டோரங்களில் நேற்று மாலை இன்சுலின் ஊசி போடப்படும் சிரிஞ்சுகள் ஆயிரக்கணக்கில் கொட்டப்பட்டிருந்தன.
சாலைகளில் செல்வோர் கால்களில் குத்தும் படியாக ஊசிகள் அதிகமாக கிடந்ததால் பொதுமக்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி துப்பரவு பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடம் வந்து ஊசிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications