அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து சக்தி கோதண்டம் நீக்கம்
சென்னை: அதிமுக இலக்கிய அணி துணைச் செயலாளர் பதவியில் உள்ள சக்தி கோதண்டம், கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் சக்தி கோதண்டம் இன்று முதல் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
சக்தி கோதண்டம் ஏற்கனவே வகித்து வரும் அதிமுக இலக்கிய அணி துணைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்.
அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் சவுந்திரவள்ளி, விஜயா பிச்சை ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
விஷூ திருநாள் வாழ்த்து:
அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், மலர்கின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் மலையாள மக்கள் அனைவருக்கம் எனது இனிய விஷூ திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு தினத்திற்கு முந்தையநாள் பூ, காய், கனி, நாணயங்கள் மற்றும் உன்னதமான பொருட்களை பூஜை அறையில் வைத்து, புத்தாண்டு தினத்தன்று விடியற்காலையில் எழுந்தவுடன் முதலில் அவற்றைக கண்டால் அந்த ஆண்டு வளங்களும், நலங்களும் நிறைந்ததாக அமையும் என்பது நம்பிக்கை.
அவர்களது நம்பிக்கைக்கு ஏற்றாற்போல், இந்தப் புத்தாண்டு செழுமையானதாகவும், நேர்த்தியானதாகவும், சிறப்பானதாகவும் அமைய வேண்டும் என்ற என் னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, என் இனிய “விஷூ" திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications