மத்திய அமைச்சர் ராசாவுக்கு எதிராக சு.சாமி வழக்கு

தலைமை நீதிபதி மதன் லோகுர் முன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் சாமி கூறியிருப்பதாவது:
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக 18 மாதங்களுக்கு முன் பிரதமருக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகார் அடிப்படையில் மத்திய அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பிரதமர் மறுத்துவிட்டார் என்று சாமி கூறியுள்ளார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கூறுகையில், 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ அடையாளம் தெரியாத 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை பிரதமர் எடுத்துள்ள நிலைப்பாடு சரியே என்று நீதிமன்றம் கருதுகிறது.
இது தொடர்பாக, சாமி தாக்கல் செய்த புகார் மனுவை ஆவணமாக ஏற்று பிரதமருக்கு உத்தரவிட முடியாது. சாதாரண குற்றச்சாட்டை ஆதாரமாக வைத்து இதுபோல விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளை சாமி தாக்கல் செய்யலாம் என்ற நீதிபதி
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மே 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Click it and Unblock the Notifications
