மே.வங்கம், பீகார், அஸ்ஸாமில் கடும் சூறாவளிக்கு 120 பேர் பலி -200 பேர் காயம்
புர்னியா (மேற்கு வங்கம்) : மேற்கு வங்கம், பீகார், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வீசிய கடும் சூறாவளியில் சிக்கி 120 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேற்கு வங்கத்தில் ஒரு மாவட்டமும், பீகாரில் ஐந்து மாவட்டங்களும், அஸ்ஸாமில் ஒரு மாவட்டமும் சூறாவளிக்குப் பாதிக்கப்பட்டுள்ளன.
மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சூறாவளி வீசியது. மேற்கு வங்கத்தின் வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள நான்கு தாலுகாக்களில் உள்ள கிராமங்கள கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இங்கு 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளிக்கு 50 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பீகாரில்தான் அதிகபட்சம் 77 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஐந்து மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 39 பேரும், அஸ்ஸாமில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.
பீகாரின் புர்னியாவில் 33 பேரும், அராரியாவில் 33 பேரும் கத்தியாரில் 7 பேரும், சுபாலில் 2 பேரும், கிஷன்கஞ்ச்சில் 2 பேரும் இறந்துள்ளனர்.
சூறாவளி குறித்து சுதன் சஹாய் என்பவர் கூறுகையில இது அய்லா புயலைப் போல பயங்கரமாக இருந்தது. அனைவரும் மிகவும் பயந்து போய் விட்டோம் என்றார்.
சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1.50 லட்சம் வழங்க பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்க அரசு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதியை அறிவித்துள்ளது.
-
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications