குண்டாக இருப்பதால் முதலிரவைக் கூட நடத்தாமல் ஓடி விட்டார் கணவர்- பெண் புகார்
கோவை: தான் குண்டாக இருப்பதால் கோபமடைந்த கணவர், முதலிரவைக் கூட முடிக்காமல் லண்டனுக்கு ஓடிப் போய் விட்டார் என்று கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் மோகன்குமார் (35). லண்டனில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்நத் அனுசுதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மோகன்குமார் லண்டன் போய் விட்டார்.
இந்த நிலையில், அனுசுதா, சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அப்புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அந்தப் புகாரில்,
கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த டாக்டர் மோகன்குமார் என்பவருக்கும், எனக்கும் கடந்த 6-6-08 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.10 லட்சம் ரொக்கம், 100 பவுன் நகையையும், மாப்பிள்ளைக்கு 3 பவுன் தங்கச்சங்கிலியும் போடப்பட்டது.
திருமணம் முடிந்த அன்றே என் கணவர் என்னை வெறுக்கத்தொடங்கினார். நான் குண்டாக இருப்பதாக கூறி, முதலிரவு அறையில் என்னை இழிவுபடுத்தினார். முதலிரவு நடைபெறவில்லை.
ஈரோட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவையில் தங்கி இருந்தேன். மோகன்குமார் என்னிடம் கணவராக நடந்து கொள்ளவில்லை. முகம் கொடுத்து கூட பேச மறுத்தார்.
என்னிடம் இருந்து தப்பி ஓடுவதுபோல, திடீரென்று 14-06-08 அன்று, அதாவது திருணம் முடிந்து ஒரு வாரத்துக்குள் மோகன்குமார் விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் போனில் கூட தொடர்பு கொள்ளவில்லை.
நான் கோவையில் கணவரின் குடும்பத்தாருடன் இருந்தேன். அவர்களும் எனது குண்டான உருவத்தை சுட்டிக்காட்டி கேவலமாக பேசினார்கள். அவர்களது தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தது. என்னை வீட்டைவிட்டு விரட்டுவதையே குறிக்கோளாக கொண்டு நடந்துகொண்டனர். இதனால் நான் வேறு வழியின்றி தவித்தேன். கணவரின் குடும்பத்தாரின் மிரட்டலுக்கு பயந்து எனது தாய் வீட்டுக்கு வந்து விட்டேன்.
எனது கணவர் மோகன்குமார், மாமனார் சத்தியமூர்த்தி, மாமியார் ருக்மணி, கணவரின் தம்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அனுசுதா.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications