நள்ளிரவு வரை நீடித்த ஐபிஎல் அலுவலக ரெய்ட்-லலித் மோடியிடமும் விசாரணை
மும்பை மும்பையில் உள்ள ஐபிஎல் தலைமையகத்தில் நேற்று மாலை தொடங்கிய வருமான வரி சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் அமைப்பில் பெரும் பணம் புழங்குகிறது. இதன் நிர்வாகத்திலும், வருவாயிலும் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. மேலும், ஐபிஎல் போட்டிகள் மூலம் அரசுக்கு வர வேண்டிய ரூ. 300 கோடி வரி வருவாயைக் குறைக்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து ஐபிஎல் நிர்வாகத்தைக் கண்காணித்து வந்த வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி ரெய்டில் இறங்கினர். நேற்று மாலை 6 மணியளவில் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமையகத்திற்குள் உள்ள ஐபிஎல் தலைமையகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.
அங்கு தீவிர சோதனைகள் மற்றும் விசாரணையில் அவர்கள் இறங்கினர். கிட்டத்தட்ட 7 மணி நேரம் இந்த சோதனை மற்றும் விசாரணை நடந்த்து. நள்ளிரவைத் தாண்டி அதிகாலை 1.30 மணியளவில்தான் வருமானவரித்துறைக் குழுவினர் அங்கிருந்து வெளியேறினர்.
சோதனையின்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி உடன் இருந்தார்.
சோதனையின் முடிவு என்ன, ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த விவரங்களை வெளியிட வருமான வரித்துறையினரும், ஷெட்டியும் மறுத்து விட்டனர்.
சோதனையின்போது ஐபிஎல் ஆணையர் லலித் மோடி அங்கு விரைந்து வந்தார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இங்கு சோதனையை முடித்து விட்டு ஒர்லி பகுதியில் உள்ள மோடியின் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போதும் மோடி உடன் இருநதார்.
மோடியின் உறவினர்கள் 3 பேர் ஐபிஎல் அணிகளின் நிர்வாகங்களில் தொடர்பு வைத்துள்ளனர். இதுதவிர பல்வேறு அணிகளை வாங்கிய விவகாரத்தில மோடியின் ஆதிக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. உச்சகட்டமாக ஐபிஎல் கொச்சி அணியை வாங்கிய விவகாரத்தில் மோடி தரப்பிலிருந்து பெரும் அழுத்தம் கொடுக்கப்ப்ட்டதாகவும் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியுள்ளன.
கொச்சிக்குப் பதில் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட அணியை உருவாக்க மோடி கடுமையாக முயன்றார். அது முடியாததால்தான் தற்போது தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார் என கொச்சி அணியின் நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் வருமான வரி சோதனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications