ஐபிஎல் போட்டிகள்- கிரிக்கெட்டே அல்ல: விளையாட்டு அமைச்சர்
டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கிரிக்கெட் விளையாட்டே அல்ல என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் கூறினார்.
ஐபிஎல் கொச்சி கிரிக்கெட் அணி குறித்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து நானும் கேள்விப்பட்டேன். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் (ஐபிஎல்) கிரிக்கெட் விளையாட்டே அல்ல என்பதுதான் எனது கருத்து.
வணிக நோக்கிற்காக விதிகளை வணிகரீதியில் மாற்றி கிரிக்கெட் மைதானத்திற்குள் மதுபான பாட்டில்கள் கொண்டு வரும் அளவுக்கு நிலைமையை கொண்டு வந்துவிட்டனர். இதை இந்திய கிரி்க்கெட் வாரியம் வேடிக்கை பார்க்கிறது.
மேலும் மங்கூஸ் பேட்களை அனுமதித்தும், பவுன்ட்ரி எல்லைகளை சுருக்கியும் ஐபிஎல் போட்டிகளில் பவுலர்களை விட பேட்ஸ்மேன்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து விளையாட்டையே கெடுத்து வருகின்றனர்.
அணிகளை வாங்குபவர்கள் இந்த விளையாட்டை மேம்படுத்துவதற்காக எல்லாம் வாங்கவில்லை. பணம் கொடுத்து வாங்குகிறார்கள்.. அதை வைத்து சம்பாதிக்க எல்லை குறுக்கு வழிகளிலும் ஈடுபடுகிறார்கள்.
இதில் அணியை வாங்கியவர்களின் விவரத்தை வேறு மறைக்க வேண்டும் என்று ரூல் பேசுகிறார்கள். எல்லா ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் விவரத்தையும் வெளியிட வேண்டியது மிக மிக அவசியம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications