சத்துணவில் முட்டை வழங்குவது ஏன்?-கருணாநிதி
சென்னை: சட்டசபையில் இன்று உணவுத்துறை அமைச்சர் வேலு பேசுகையில், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சத்துணவில் சத்து இல்லை என்பதால் முதல்வர் கருணாநிதி முட்டை வழங்கினார் என்றார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி கூறுகையி்ல்,
உணவுத்துறை துறை அமைச்சர் பேசும்போது, அப்போது போட்ட சத்துணவில் சத்து இல்லை என்று குறிப்பிட்டார். அதில் ஒரு திருத்தம். அந்த சத்து போதாது என்பதற்காகத்தான் முட்டை வழங்கப்பட்டதே தவிர சத்து இல்லை என்பதற்காக அல்ல என்றார்.
இதையடுத்து அதிமுகவினர் அமைதியாயினர்.
மானியக் கோரிக்கை பற்றி மட்டும் பேசுங்கள்:
பின்னர் பள்ளிக் கல்வித்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய திமுக எம்எல்ஏ மாலை ராஜா பேசும்போது, தனது தொகுதியில் உள்ள குறைகளைப் பற்றியும் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர், பள்ளிக் கல்வித்துறை மானியத்திலே பாலம் எங்கிருந்து வந்தது?. ஆறு எங்கே இருந்தது என்பதை எல்லாம் நமது உறுப்பினர்கள் எண்ணிப் பார்த்து பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாம் பேசுகின்ற மானியத்தின் தலைப்புக்கும், பேச்சுக்கும் தொடர்பு இருந்தால்தான் நம்மை நல்ல “பார்லிமெண்டரியன்" என்று மக்கள் மதிப்பார்கள்.
அதைக் கற்று தெளிந்து அவ்வாறு ஒழுகிட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். இது எல்லா உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்று கருதுகிறேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications