குமுதம் தலைமை நிருபர் மீது குமுதம் சினேகிதி பெண் ஆசிரியர் செக்ஸ் புகார்!
சென்னை: தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக குமுதம் தலைமை நிருபர் திருவேங்கிமலை சரவணன் மீது, அதே குழுமத்தைச் சேர்ந்த சிநேகிதி இதழின் பொறுப்பாசிரியர் லோகநாயகி புகார் தெரிவித்துள்ளார்.
குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் நடத்தும் பெண்கள் பத்திரிகையான சிநேகிதியின் பொறுப்பாசிரியராக இருப்பவர் லோகநாயகி. இதற்கு முன்பும் பல நிறுவனங்களில் பணியாற்றியவர்.
இவர் நேற்று மாலை சென்னை மாநகராட்டி காவல் ஆணையர் ராஜேந்திரனைச் சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார். பின்னர் நிருபர்களை அழைத்து அவர் கூறியதாவது:
குமுதம் பப்ளிகேஷன்ஸ் நடத்தும் வார இதழான குமுதம் பத்திரிகையின் தலைமை நிருபராக பணியாற்றும் திருவேங்கிமலை சரவணன் என்னையும், என்னோடு பணிபுரியும் இதர பெண் நிருபர்களையும், உதவி பெண் ஆசிரியர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தினமும் செக்ஸ் தொல்லை கொடுக்கிறார். திருமணமாகாத பெண்களையும் கேலியும் கிண்டலும் செய்கிறார்.
இது பற்றிக் கேட்டால், உங்களை அசிங்கப்படுத்தி, அவதூறுகளை பரப்பி, வேலையை விட்டே தூக்கி விடுவேன் என்று மிரட்டுகிறார். இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்து, திருவேங்கிமலை சரவணன் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளேன். மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்..." என்றார்.
இந்த பிரச்சனை தொடர்பாக பத்திரிகை நிர்வாகமும் விசாரணை நடத்தி சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications