நாவடக்கத்துடன் பேசுமாறு தரூர் உதவியாளருக்கு காங். சூடு
டெல்லி : தனது உதவியாளர் ஜேக்கப் ஜோசப்பை நாவடக்கத்துடன் நடந்து கொள்ளுமாறு சசி தரூர் அறிவுறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கண்டிப்புடன் கூறியுள்ளது.
லலித் மோடிக்கு எதிராக தரூரை விட படு காட்டமாக கருத்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் ஜோசப். இவர் தரூரின் ஸ்பெஷல் டூட்டி ஆபிசர் ஆவார்.
மோடி ஒரு போதைப் பொருள் கடத்தல்காரர், அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தபோது போதைப் பொருள் வைத்திருந்த்தாக கூறி கைது செய்யப்பட்டவர் என்றெல்லாம் ட்விட்டர் மூலம் செய்தி பரப்பி வருகிறார் ஜோசப்.
அத்தோடு நில்லாமல் தரூருக்கு கொலை மிரட்டல் விடுத்து எஸ்.எம்.எஸ். வந்துள்ளதாகவும், அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இவரே செய்தி பரப்பினார். ஆனால் தரூருக்குப் பாதுகாப்பை அதிகரிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகமும், டெல்லி காவல்துறையும் உடனடியாக மறுத்து விட்டன.
அதேசமயம், தரூருக்கு வந்த கொலை மிரட்டலும் கூட வழக்கமாக விஐபிகளுக்கு வரும் மிரட்டல்தான் என்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். ஆனால் தேவையில்லாமல் அதைப் பெரிதுபடுத்தி ஊதி விட்டார் ஜேக்கப்.
இந்த நிலையில் ஜேக்கப்பை இந்த விவகாரத்திற்குள் இழுத்துள்ளது பாஜக. ஐபிஎல் ஏலம் நடந்தபோது அங்கு ஜேக்கப் இருந்துள்ளார். இதற்கு என்ன காரணம். இவருக்கும், அந்த ஏலத்தில் கலந்து கொண்ட ரெண்டஸ்வஸ் நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு என்று பாஜக சரமாரியாக கேட்டுள்ளது.
ஜேக்கப்பும் ஒரு மலையாளிதான். ஜேக்கப்பும், தரூரும் டெல்லியில உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்தவர்கள். துபாயில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள்.
ஒரு பக்கம் தரூரால் சர்ச்சை, இன்னொரு பக்கம் ஜேக்கப்பால் சலசலப்பு என்று டென்ஷன் கூடி வருவதால் காங்கிரஸ் கட்சி கடுப்படைந்துள்ளது. ஜேக்கப் நாவடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல் பேசக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்துமாறு தரூருக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications